சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காசி ஆன்மீக சுற்றுப் பயணத்தைப் பங்கேற்று முதல் அணியில் காசி தரிசனம் செய்து முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பிய பயணிகளை வரவேற்ற இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்துசமய அறநிலையத்துறை மாணிக்க கோரிக்கையில் ஏழாவது கோரிக்கையாக ஆன்மீக பயணம் மேற்கொள்வதற்கு முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார்கள்.
சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ராமேஸ்வரத்திலிருந்து காசிக்குச் செல்ல புனித யாத்திரை அறிவித்திருந்தோம் .முதலமைச்சர் மு க ஸ்டாலின் இதற்காக 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
முதற்கட்டமாக 66 நபர்கள் காசிக்குச் சென்று திரும்பி உள்ளனர். அவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டில் மொத்தம் 200 நபர்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் முதல் கட்ட பயணம் முடிவு பெற்ற நிலையில் இரண்டாம் கட்ட பயணமாக மார்ச் 1 மற்றும் மூன்றாம் கட்ட எட்டாம் தேதி பக்தர்கள் காசிக்கு அழைத்துச் செல்ல உள்ளனர். தமிழகத்தில் 18 மாவட்டங்களைச் சார்ந்த நபர்கள் ஆன்மிகத்தைப் பயணத்தை மேற்கொண்டு உள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஆன்மீக பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துச் செல்ல முடியாதவர்கள் அடுத்த ஆண்டு முன்னுரிமை வழங்கப்பட்டு ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
அதே போல் அடுத்த கட்டமாக 2023 மற்றும் 2024 ஆண்டு தொடங்குகின்ற போது ஏற்கனவே இதற்காகப் பயணத்திற்காக அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முதல் உரிமை அளிக்கப்பட்டு அவர்களை அழித்துச் செல்வதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்ய இருக்கிறோம் என்றும் இந்த ஆன்மீகப் பயணம் மேலும் தொடரும் எனத் தெரிவித்தனர்
காசி தமிழ்ச் சங்கம் போட்டியாக திமுக இந்த ஆன்மீகப் பயணம் தொடங்கியதா எனச் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு?
யாருக்காகவும் இது போட்டி அல்ல கடந்த ஆண்டு மானிய கோரிக்கையில் இதை அறிவித்து விட்டோம் என இப்போதுதான் இந்த காசி சங்கமம் உருவானது தான்.
மேலும் தமிழக அரசுக்குப் போட்டியாகத் தான் இந்த காசி தமிழ்ச் சங்கம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று அமைச்சர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்
அதைத்தொடர்ந்து பேசிய அவர் இப்போதுதான் இந்த ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம்.
மேலும் பக்தர்கள் வரவேற்பைப் பொறுத்து தமிழக அரசிடம் மானியம் பெற்று இதற்கான எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்