தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லிங்குசாமி . விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்துவந்த இவர் 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். இவரது இயக்கத்தில் வெளிவந்த பையா, ஆனந்தம், சண்டக்கோழி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் மூலம் தென்னிந்தியாவில் நன்கு அறியப்பட்ட இயக்குனராக இருக்கிறார்.இதனை தொடர்ந்து திருப்பதி புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில் தி வாரியர் என்ற திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டது. இதில் தெலுங்கில் மட்டுமே இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் செக் மோசடி செய்த வழக்கில் லிங்குசாமிக்கும், அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போசிற்கும் 6 மாத சிறைத் தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014-ல் கார்த்தி, சமந்தா நடிப்பதாக இருந்த எண்ணி 7 நாள் என்ற படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. இதற்காக, பிவிபி. கேபிடல்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து ரூ. 1.03 கோடிகடன்பெற்ற இயக்குனர் லிங்குசாமி, அதனை காசோலையாக அளித்துள்ளார். கணக்கில் பணம் இல்லாததால் செக் பவுன்ஸ் ஆகியுள்ளது.
இதையடுத்து பிவிபி கேபிடல்ஸ் நிறுவனம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் லிங்குசாமிக்கும், அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோசிற்கும் 6 மாத சிறை தண்டனை வழங்கி சைதாப்பேட்டை நீதின்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து இயக்குனர் லிங்குசாமி தெரிவிக்கையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து,சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையிடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.