இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என (பிஎச்யூ) மாணவர்களுடன் ஆளுநர் ரவி பேச்சு.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பனாரஸ் இந்து பல்கலைக்கழக (பிஎச்யூ) மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடினார்.
அப்போது, பேசிய அவர் , ஒரே தேசம், ஒரே அமைப்பு’ என்ற கொள்கையின் அடிப்படையில் தமிழ் மொழியும் அதன் கலாச்சாரமும் கொண்டாடப்படும் வகையில், வாரணாசியில் கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி ‘காசி தமிழ் சங்கம்’ நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் பல அம்சங்களை வாரணாசி தமிழர்கள் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது. தொடர்ந்து பேசிய அவர் இங்கு தமிழ் பயிலும் வட இந்திய மாணவர்களுக்கு தமிழ் மொழியை குறித்து கவர்னர் எடுத்துறைத்தார்.
அப்போது தமிழ் மீது ஹிந்தியை திணிக்க முடியாது ஹிந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என்றும்,தமிழ் மீது ஹிந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது.
தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ்நாட்டுக்கு தமிழ் பயில வந்திருக்கும் வட இந்திய மாணவர்களுக்கு பாராட்டுக்கள் என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கு 3500 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல அதற்கும் முந்தைய வரலாறு உண்டு. தமிழ் இல்லாமல் பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை கற்றுக் கொள்ள நினைப்பது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு இருக்கிறது. தமிழை ஆழமாக படிக்க வேண்டும்.தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும் என தெரிவித்தார்.
இனி ஒவ்வொரு ஆண்டும் தமிழ் பயிலும் மாணவர்களை வரவழைத்து ராஜ் பவன் சார்பில் அவர்களுக்கு தமிழ் தரிசனம் நிகழ்ச்சி பாரம்பரியமாக இனி நடத்தப்படும் என்று தெரிவித்தார் .
2047 ஆம் ஆண்டு இந்தியா முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாகவும்,உலகிற்கு தலைமை ஏற்கும் நாடாகவும் இந்தியா விளங்கும்என உறுதியளித்தார்.
மேலும் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் வட இந்திய மாணவர்களை ராஜ்பவன் விருந்தினர்களாக 10 நாள் தமிழகம் வந்து செல்லுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.