வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை நீக்கச் சொல்லி அடையாள அட்டையுடன் சரிபார்த்த ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இதுவரை 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன.
இதனையடுத்து ஆந்திரா சட்டசபைத் தேர்தல் (மே 13-ந் தேதி) இன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.அதன்படி, 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதில் தென்னிந்தியாவைச் சேர்ந்த தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவை தொகுதிகளும், ஆந்திராவைச் சேர்ந்த 25 மக்களவை தொகுதிகளும் அடங்கும்.
அதோடு, ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, இன்று ஆந்திர சட்டசபைத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை நீக்கச் சொல்லி அடையாள அட்டையுடன் சரிபார்த்த ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஆதார் கார்டை கேட்டு பாஜக வேட்பாளர் மாதவி லதா ‘சரிபார்த்த’ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை பர்தாவை தூக்க சொல்லி.. முகத்தை காட்டு என்று இவர் மிரட்டி உள்ளார்.
3 ஆண்டுகள் திமுக ஆட்சி எப்படி? மின் கட்டண உயர்வு முதல் ஊழல் புகார் வரை! அய்யநாதன் Decodes அவர்களை மிரட்டி முகத்தை பார்த்த பின்பே வாக்களிக்க மாதவி லதா அனுமதித்தார்.
இதை போலீசாரும் கூட வேடிக்கை பார்த்துள்ளனர். தேர்தல் அதிகாரிகளும் இதை வேடிக்கை பார்த்து உள்ளனர். அங்கே இருந்த இஸ்லாமிய பெண்கள் எல்லோரையும் பெயரை கேட்டு, ஆதாரில் உள்ள போட்டோவை பார்த்து பின்னர் அவர்களின் முகத்தை ஹிஜாப்பை தூக்கி காட்ட சொல்லி அதன்பின்பே அனுமதித்தார்.
இதனை தொடர்ந்து ஐதராபாத் தொகுதி பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக சமீபத்தில் பாஜகவின் ஹைதராபாத் வேட்பாளர் கே மாதவி லதா மசூதியை நோக்கி அம்பு எய்த சைகை காட்டியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.