காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையை தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
இதில் 3,570 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த சுற்றுப்பயணம் சுமார் ஐந்து மாதங்களில் 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களை கொண்டு இவை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தப்படுகிறது. இந்தியாவின் அரசியல் வரலாற்றில் ஒரு “திருப்புமுனை” என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மேலும் ,இனத்தால் மொழியால் மதத்தால் பிரிந்துள்ள மக்களை ஒன்று சேர்க்கவே இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாரத் ஜோடா யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி ரூ 41 ஆயிரம் மதிப்புள்ள டிஷர்ட் அணிந்து இருப்பதாக பாஜக விமர்சித்துள்ளது. புதுடெல்லி, பாரத் ஜோடா யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி ரூ 41 ஆயிரம் மதிப்புள்ள டிஷர்ட் அணிந்து இருப்பதாக பாஜக விமர்சித்துள்ளது.
பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளது. முதல் புகைப்படத்தில் ராகுல் காந்தியின் புகைப்படம். மற்றொன்று அவர் அணிந்திருந்ததுபோன்ற ஒரு டி-ஷர்ட்டின் விலையை குறிக்கும் படம். அந்த படத்தில் பர்பரி டி-ஷர்ட்டின் விலை ரூ.41.257 என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Bharat, dekho! pic.twitter.com/UzBy6LL1pH
— BJP (@BJP4India) September 9, 2022
அதோடு பாரதம் பார்க்கட்டும் என்ற வார்த்தையையும் பாஜக பதிவிட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், பிரதமர் மோடி ரூ 10 லட்சம் மதிப்புள்ள கோர்ட் அணிந்து இருந்ததாக விமர்சித்துள்ளது. மேலும், பாரத் ஜோடா யாத்திரையில் திரளும் கூட்டத்தை பார்த்து பயந்து வீட்டீர்களா? பிரச்சினைகளை பற்றி பேசுங்கள்.. வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் குறித்து பேசுங்கள்.
ஆடைகள் குறித்து நாம் விவாதிக்க வேண்டும் என்றால், பிரதமர் மோடி 10 கோடி மதிப்புள்ள சூட் மற்றும் 1.5 லட்சம் பதிப்புள்ள கண்ணாடி அணிந்து இருந்தது பற்றியும் பேசப்படும்” என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.