மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற சுரேஷ் கோபி , தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று தெரிவித்துள்ளது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக முடிவு செய்தது. இதையடுத்து குடியரசுத் தலைவர் திரௌவதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
மேலும் புதிய அரசு அமையும் வரை காபாந்து பிரதமராக செயல்படும்படி பிரதமர் மோடியை குடியரசு தலைவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, ஜூன் 09 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடிபதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் , நேற்று ( ஜூன் 09) டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் 3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன் இணை அமைச்சர்கள் -36 , கேபினட் அமைச்சர்கள் -30 , தனி பொறுப்பு -5 இணை அமைச்சர்கள் என 72 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த பதவியேற்பு நிகழ்வில், வெளிநாட்டுத் தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், பாஜக தலைவர்கள், பல்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டர்.
அந்த வகையில், கேரள மாநிலம் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி, 4.12 லட்சம் வாக்குகள் பெற்று, 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கேரளத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு பாஜக எம்பி சுரேஷ் கோபி என்பதால், அவருக்கு அமைச்சர் பதவியை பாஜக தலைமை கொடுத்தது.மேலும் பதவியேற்பு விழா நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ் கோபி,”
சினிமாவில் நடிக்கவிருப்பதால் அமைச்சர் பதவி வேண்டாம் எனக் கூறினேன்; ஆனால் பாஜக தலைமை கேட்டுக்கொண்டதால் மறுக்கவில்லை; மத்திய அமைச்சர் பதவியில் இருந்து என்னை விடுவிப்பார்கள் என நம்புகிறேன் , எம்பியாக இருந்து திருச்சூர் மக்களுக்கு தொடர்ந்து நல்லது செய்வேன் என்று தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற சுரேஷ் கோபி , தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று தெரிவித்துள்ளது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.