மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு 13 மாதங்கள் உள்ள நிலையில் தேர்தல்களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் உலகில் அதற்குப் பின்னடைவு ஏற்படுத்தும் வகையில் ஒரு அரசியல் நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பெண் அரசியல்வாதியாக இருப்பவர் தான் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தின் முதலமைச்சரும், திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சருமான இவர்.
கடந்த சில மாதங்கள் முன்பு வரை பாஜக மற்றும் மோடியைக் கடுமையாக எதிர்த்து வந்தார். ஆனால் அவரது மம்தா பானர்ஜி கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களின் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை அடுத்து அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.
அதே போன்று பாஜகவைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கத் தொடங்கினார். இந்த நிலையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் இன்று சந்தித்தார்.
மம்தா மற்றும் அகிலேஷ் யாதவ்வின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலுக்குக் கிளம்பியது. இதனை தொடர்ந்து ஒடிசா மாநில முதலமைச்சர்
பிஜு ஜனதா தளம் கட்சியின் நவீன் பட்நாய்க் அவர்களை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பிஜு ஜனதா தளம் கட்சியின் நவீன் பட்நாய்க் அவர்களை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பாஜகவைப் போன்று காங்கிரஸ் கட்சியை எதிர்க்க இந்த மூன்று மாநில தலைவர்கள் முடிவெடுத்து உள்ளதாகத் தகவல் வெளியாக்கிய உள்ளது.
இந்த நிலையில் பாஜகவிற்க்கு எதிராக எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை முன் நிறுத்தும் வகையில் காங்கிரஸ் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த மூன்று முக்கிய தலைவர்களின் முடிவு பெரும் ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தியின் விவகாரம் நாடாளுமன்றத்தில் தொடர் பிரச்சினை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஆளு கட்சியின் முன் வைத்து பாஜக இதுபோன்ற சம்பவங்களை ஈடுபட்டு வருவதாக ராகுல் காந்தி சாட்டியுள்ளார்.