மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் விதிமுறைகளை மீறும் விதமாக எந்தவித விளம்பரத்தையும் பாஜக வெளியிடக்கூடாது என கொல்கத்தா நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் 23 மாவட்டங்கள், 42 மக்களவைத் தொகுதிகள், 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் மே 25ம் தேதி நடைபெற உள்ள 6ம் கட்டத் தேர்தலில் 8 தொகுதிகளுக்கும், ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள 7ம் கட்டத் தேர்தலில் 9 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதேபோல், பாஜகவும் தனித்துப் போட்டியிடுகிறது.
இதையும் படிங்க: மக்களவை தேர்தல் – நாளை 6ம் கட்ட வாக்குப்பதிவு எங்கெல்லாம்?
இந்த நிலையில் , மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் விதிமுறைகளை மீறும் விதமாக எந்தவித விளம்பரத்தையும் பாஜக வெளியிடக்கூடாது என கொல்கத்தா நீதிமன்ற தனி நீதிபதி கடந்த 20-ம் தேதி தடை விதித்தார்.
இந்த நிலையில்,மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் விதிமுறைகளை மீறும் விதமாக எந்தவித விளம்பரத்தையும் பாஜக வெளியிடக்கூடாது என கொல்கத்தா நீதிமன்ற தனி நீதிபதி கடந்த 20-ம் தேதி தடை விதித்தார்.
இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது. அப்போது அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தனி நீதிபதி தீர்ப்பில் தலையிட முடியாது என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து நேற்று பாஜக சார்பில், உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள் வரும் திங்கள்கிழமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்து பரிசீலிக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.