மத்தியப் பிரதேசத்தில் மருத்துவ அலட்சியத்தால் ஒரு பெண்ணின் தலையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் கசிவதை நிறுத்த ஆணுறை ரேப்பரைப் பயன்படுத்த சம்பவம் ஆச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டம் அடுத்த தரம்கர் பகுதியைச் சேர்ந்தவர் காயமடைந்த பெண் ரேஷ்மா பாய்.இவருக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்க்காக முதலுதவி செய்ய மொரீனாவில் உள்ள பர்சா சமூக சுகாதார மையத்திற்கு சென்றார்.
அந்தப் பெண்ணுக்கு வலி அதிகமாக இருந்ததால் மொரேனாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அப்போது மருத்துவர்கள் அவருடைய தலையில் கட்டப்பட்டிருந்த கட்டை பிரித்து பார்த்தபோது தலையில் ரத்தக் கசிவை தற்காலிகமாக நிறுத்துவதற்காக காண்டம் ரேப்பரை வைத்திருப்பது தெரியவந்தது.
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அந்தப் பெண்ணிடம் இது குறித்து தெரிவித்திருக்கின்றனர். பின்னர் அந்தப் பெண் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸில் புகாரளித்திருக்கிறார். போலீஸார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். இந்தப் பெண்ணுக்கு தவறாக சிகிச்சை வழங்கிய அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தப் பெண் சிகிச்சை பெற்றபோது டாக்டர் தர்மேந்திர ராஜ்பூத் அவசரப் பணியில் இருந்தாகவும், அவர் வார்டு பாய் அனந்த் ராம் என்பவரிடம் காட்டன் பேடுகளை தலையில் வைத்து கட்டுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் வார்டு பாய் அலட்சியமாக காண்டம் ரேப்பரை வைத்துக் கட்டியிருக்கிறார்.
Head Wound Dressed With Condom Pack At Madhya Pradesh Health Centre https://t.co/MP6tYVKucr pic.twitter.com/MbNZupdL7o
— NDTV (@ndtv) August 20, 2022
ஆனால் ,அந்த பெண்ணின் தலையில் காயம் மிகவும் மோசமாக இருந்தது. இந்த சம்பவத்தில், பர்சா சமூக சுகாதார மையத்தின் வார்டு பாய் மத்தியப் பிரதேசத்தின் சுகாதாரத் துறையால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.