ராகுல்காந்தி தனது பேச்சின்போது ஹிந்துஸ்தான் என்னும் வார்த்தையை ம்யூட் செய்ததாக அண்ணாமலை தவறான தகவலைப் பதிந்துள்ளதாக ஆதாரத்துடன் இணையவாசி ஒருவர் பதில் அளித்துள்ளார்.
பா.ஜ.க தமிழ மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், ராகுல்காந்தி தனது நேரடி ஒலிபரப்பு பேச்சின்போது ஹிந்துஸ்தான் என்னும் வார்த்தை உச்சரிக்காமல் ம்யூட் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸும், அவர்களது கூட்டணியினரும் ஏன் இப்படி வெறித்தனமாக இருக்கிறார்கள். இதைத்தான் கடந்த காலத்திலும் சொன்னார்கள். சமீபத்திலும் சொன்னார்கள்,
ராகுல்காந்தி அவரது பிரசாரத்தின் நேரடி ஒளிபரப்பின் போது இந்துஸ்தானின் செல்வம் என்ற வார்த்தையை ம்யூட் செய்துள்ளார்.
நமது பிரதமர் நரேந்திரமோடி இந்தியா கூட்டணியினிரின் திட்டத்தை தனது பேச்சில் அம்பலப்படுத்தியிருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.
அத்துடன் ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார்.
Thiru @RahulGandhi decide to mute the word “Hindusthan’s wealth”
ஆனால், அண்ணாமலை இணைத்துள்ள வீடியோவில் ராகுல்காந்தி பேசியது ம்யூட் செய்யப்பட்டிருப்பதாகவும் அது தொழில் நுட்பக் கோளாறு எண்றும் இணைய வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ராகுல்காந்தி பேசிய அதே நிகழ்ச்சியின் மற்றொரு வீடியோவினையும் இணைத்துள்ளார்.
அதில் இந்துஸ்தான் என்னும் வார்த்தை ம்யூட் செய்யப்படாமல் உள்ளது.
Stop misleading your followers
அண்ணாமலை தன்னைப் பின்தொடர்பவர்களை தவறாக வழிநடத்துவதை நிறுத்துங்கள் என்று அந்தப் பதிவர் குறிப்பிட்டுள்ளார்.