உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த நீர்யானை பெண் என்பது 7 வருடங்களுக்கு பிறகு தெரியவந்ததால் பராமரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உலகத்தில் வாழக்கூடிய விலங்குகளில் இரண்டாவது பெரிய தரைவாழ் விலங்கு என்ற பெருமைக்குரியது நீர்யானை. ஆப்பிரிக்காவில் வாழும் மிகவும் பலம் பொருந்திய விலங்குகளில் இதுவும் ஒன்று ஆகும்.
இது ஒரு தாவர உண்ணி. இது பார்க்க அமைதியாக இருக்கும், மேலும் இந்த நீர் யானை தானாக சென்று யாரையும் தாக்காது அது வாழக்கூடிய இடத்தினுள் நீங்கள் அத்துமீறி நுழைந்தால் அப்பொழுது உங்களை மிகவும் மூர்க்கத்தனமாக தாக்கும்.
இவை கூட்டம் கூட்டமாக வாழக்கூடியது ஒரு கூட்டத்தில் 40 நீர்யானை வரை இருக்கும். இவை நீரில் உள்ள போதே குட்டிகளை பெற்றுக்கொள்ளும். இந்த குட்டிகள் பிறக்கும்போதே 45 கிலோகிராம் அளவிற்கு உடல் எடையை கொண்டுள்ளன.
இந்த குட்டிகள் நடப்பதற்கு கற்றுகொள்ளுவதற்கு முன்னரே நீச்சலைக் கற்றுக்கொள்ளுகின்றன.
நீர்யானை என்னதான் தரைவாழ் உயிரினமாக இருந்தாலும் இவைகள் இனப்பெருக்கம் செய்வது குட்டிகளை பிரசுவித்தல் போன்ற அனைத்தையும் தண்ணீரிலேயே செய்ய முடியும். இவைகளால் 5 நிமிடத்திற்கு தண்ணீரில் மூச்சை அடைத்து கொள்ள முடியும்.
இந்த நிலையில் தான் ஜப்பானின் ஒசாக்கா டென்னொஜி வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த நீர்யானை பெண் என்பது 7 வருடங்களுக்கு பிறகு தெரியவந்ததால் பராமரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜப்பானில் ஒசாகா டென்னோஜி மிருகக்காட்சிசாலை அமைந்துள்ளது. 2017ல் மெக்சிகோவின் ஆப்பிரிக்க சஃபாரியில் இருந்து 5 வயதுடைய நீர்யானை கொண்டு வரப்பட்டது. இந்த நீர்யானைக்கு ஜென்-சானின் என்று பெயரிடப்பட்டது.
ஆண் குட்டி என்று நினைத்து அங்குள்ள பராமரிப்பாளர்கள் பராமரித்து வந்துள்ளனர். ஆனால் ஜென்-சான் நீர்யானைக்கு வயதாகிவிட்டதால் ஆண் இனப்பெருக்க உறுப்புகளை அவர்களால் அடையாளம் காண முடியாததால், மிருகக்காட்சிசாலை காவலர்கள் சந்தேகமடைந்தனர்.
ஜென்-சான் நீர்யானை ,வழக்கமான ஆண் நீர்யானை நடத்தையில் பெண் நீர்யானைகளுக்கு காதல் அழைப்புகள் செய்தல் , இனபெருக்கதிற்க்கு தூண்டுதல் ,குறிப்பதற்காக ப்ரொப்பல்லர் போன்ற வால் அசைவுடன் மலம் கழிக்கும் போது மலத்தை சிதறச் செய்வது போன்ற செயல்கள் இல்லாமல் இருந்தது.
இந்த சூழலில் உயிரியல் பூங்கா பராமரிப்பாளர்கள் ஜென்-சான் நீர்யானை தொடர்பாக மருத்துவர்களை அணுகினர். அப்போது நீர்யானையின் DNA வை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நீர்யானை ஆண் இல்லை பெண் என தெரிவித்துள்ளனர்.