வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆட்சி செய்வது யார் என்பதை அறிந்துகொள்ள மக்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 540 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. இதில் 441 தொகுதிகளில் பாஜக தனித்து தேர்தலைச் சந்தித்துள்ளது.
அதன் கூட்டணிக் கட்சிகள் 99 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டுள்ளன.
இதையும் படிங்க: பகல் 12:20 நிலவரப்படி.. அதிமுக 3 தொகுதிகளில் 4வது இடம்..!‘
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் – 2024 குறித்த Election Highlights இந்த பதிவில் பார்க்கலாம்..
- பாஜக கூட்டணி 290க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை
- 220க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று பாஜகவுக்கு கடும் சவால் அளிக்கும் இந்தியா கூட்டணி
- உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடும் இழுபறி பாஜக கூட்டணி 37, இந்தியா கூட்டணி 43 இடங்களில் முன்னிலை
- வாரணாசி தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி முன்னிலை
- ராய்பரேலி, வயநாடு தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை
- காந்தி நகரில் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் பாஜக வேட்பாளர் அமித்ஷா
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 38 இடங்களில் முன்னிலை; அதிமுக 1, பாஜக 1
- பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை; பாஜக 0
- மகாராஷ்டிராவில் முந்தும் இந்தியா கூட்டணி! பாஜக கூட்டணி 16, இந்தியா கூட்டணி 30 இடங்களில் முன்னிலை
- ஆந்திராவில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது தெலுங்கு தேசம் 130 இடங்களில் தனித்து முன்னிலை