நடாளுமன்ற 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் நடாளுமன்ற பொதுத்தேர்தல்கள் ஏப்ரல்19, 2024 தொடங்கி ஜூன் 1, 2024 வரை நடைபெறுகின்றன.
முதற்கட்டமாக,தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம்தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்துக்கட்சி தலைவர்கள்,வேட்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தவரிசையில்,இன்று பழனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலதலைவர் முகமது முபாரக்வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சார வாகனத்தின் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இவர், பழனிமலைஅடிவாரம், சன்னதிவீதி, பழனிபேருந்துநிலையம், காந்திமார்க்கெட் ,தேரடிஉள்ளிட்டநகரின்முக்கியபகுதிகளில்பொதுமக்களைசந்தித்துபேசினார்.
அடிவாரம் பகுதிக்கு வேனில் சென்ற அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மலை அடிவார பகுதிமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலை வெற்றி என்பது மாயை – போட்டுத்தாக்கும் எஸ்.பி.வேலுமணி
தொடர்ந்து அங்கு பேசி கொண்டிருக்கும் போது தொண்டர்கள் நகரமன்ற உறுப்பினர்களின் பெயரைகளையும் சேர்த்து கோஷமிட்டனர்.
அவர்களை குறுக்கிட்ட முகமது முபாரக் கட்சி நிர்வாகிகள் பெயரை மட்டும் கோஷமிட்டால் போதும் என கூறியது, அதிமுகநிர்வாகிகளுக்கும் கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாத்தை உருவாக்கியது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு அமைதியற்ற சூழல் உருவாகியது, போலிஸாரின் உதவியுடன் இச்சூழல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
மேலும் பிரச்சாரத்தின் போது அதிமுக துணைப்பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன் வேனில் தூங்கியபடியே சென்றார்.இது பிரச்சாரத்தில் கலந்து கொண்ட வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.