கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி தாய் செல்வி ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ புகழேந்தி, கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலானது ஜூலை 10ம் தேதியும்,வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: ”இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தற்கு இது தான் காரணம்..”- போட்டுடைத்த பொன்னையன்!
இதற்கான வேட்புமனுகள் கடந்த 14 ஆம் தேதி தொடங்கபட்டு தற்பொழுது வரை 7 வேட்புமனுகள் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக – பாமக கூட்டணியில் பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் அபிநயா அறிவிக்கப்பட்டனர். மேலும் அ.தி.மு.க இத்தேர்தலை புறக்கணித்துள்ளது.
இதனை தொடர்ந்து, திமுக ,பாஜக உள்ளிட்ட கட்சிகள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் , கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி தாய் செல்வி சுயேட்சையாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.