ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்கிற தனிக்கட்சி ஒன்றைத் துவங்கினார். பின்னர் அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தீபாவின் கணவரும் தனிக்கட்சி ஒன்றைத் துவங்கினார். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து ஒன்றாக இணைந்து தி.நகரில் உள்ள அவர்களது வீட்டிலேயே வாழத்துவங்கினர்.
இந்த நிலையில் தற்பொழுது ,ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து தனது கணவர் மாதவன் தன்னை பிரிந்துவிடுவதாகக்கூறி துன்புறுத்துவதாகவும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் குற்றஞ்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக மாதவன் என்னுடன் பிரச்னை செய்கிறார். திடீரென, அவரைவிட்டு பிரிந்துபோக சொல்கிறார். ஈவு இரக்கம் இல்லாமல் நள்ளிரவில் எழுப்பி சண்டையிடுகிறார்’ என பல்வேறு குற்றச்சாட்டுகளை ‘வாட்ஸ்அப்‘ ஸ்டேட்டஸாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் இது குறித்து தீபா தெரிவிக்கையில் ,”எல்லா கணவன், மனைவிக்குள் நடப்பதுபோல்தான் எங்க குடும்பத்திலும் பிரச்சனை. எங்களோடது லவ் மேரேஜ் கிடையாது. என் அம்மாவும் மாதவனோட அம்மாவும் பேசி திருமணம் செய்து வைத்தார்கள். 11 வருடங்கள் வாழ்ந்துவிட்டு தற்போது, ’உன்னை பிடிக்கவில்லை. சேர்ந்து வாழமுடியாது’ என்கிறார் மாதவன். எதனால், இப்படி மாறினார் என்பது தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும். கடந்த ஆறு மாதமாகத்தான் என்னுடன் அதிகமாக சண்டைப் போடுகிறார்.
இந்த ஆறு மாதமாக, எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. நரம்புப் பிரச்சனை உள்ளது. மருந்துகள் எடுப்பதால் அடிக்கடி சுயநினைவில்லாமல் போய்விடுகிறேன். இதற்காக, தொடர்ந்து மருத்துவமனைக்கும் சென்றுகொண்டிருக்கிறேன். கடந்த நவம்பர் மாதத்திலிருந்து, என் மெடிக்கல் ரிப்போர்ட்ஸ்களைக் காட்டவும் தயாரா இருக்கேன். நரம்பு பிரச்சனை தவிர உடல்ரீதியான பெரிய பிரச்சனைகள் கிடையாது. ஆனால், மாதவன் என்னை விட்டுட்டுப் போயிடுவேன்னு சொல்றது மனரீதியாக பெரிய டார்ச்சராக உள்ளது. என் உடல்நிலையை இன்னும் மோசமாக்குகிறது.
உடம்பு சரியில்லாத சூழலில் மாதவனைத் தவிர்த்து, என்னைப் பார்த்துக்க யாருமே கிடையாது. அதனால, மாதவன் இதையே அட்வான்டேஜா எடுத்துக்கிறார். இது தப்புன்னு ஊரும் உலகமும் அவருக்கு எடுத்துச் சொல்லணும். எனக்கு நியாயம் கிடைக்க வழி பண்ணனும். என் அம்மாவும் அவங்க அம்மாவும் இறந்தபிறகு, எங்க வாழ்க்கை சுமூகமா இல்லை. என்னைப் பிடிக்கலை… பிடிக்கலை… பிடிக்கலைன்னு சொல்லி பைத்தியம் பிடிக்க வைக்கிறார்.
அரசியல் வாழ்க்கை வேறு – தனிப்பட்ட வாழ்க்கை வேறு:
”என் அத்தையோட அரசியல் வாழ்க்கை வேற. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை வேற. அத்தை அளவுக்கு எனக்கு தைரியம் கிடையாது. நான் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தப் பொண்ணு. அம்மா விஜயலட்சுமி நான் கும்பிடுற தெய்வம். என்னை கைக்குள்ள வச்சிப் பார்த்துக்கிட்டாங்க. எனக்கு இருந்த ஒரே சப்போர்ட் அம்மாதான். அவங்க இறந்தவுடன் எனக்கு டார்ச்சர் அதிகமாகிடுச்சி”.
மேலும் தம்பி குறித்து ”தீபக் சப்போர்ட்டிவா இருந்தா நான் ஏன் இப்படி இருக்கப்போறேன். எனக்கு ஏன் இந்த நிலைமை வரப்போகுது? ஆனால், அவனே ‘உன்னை போலீஸில் பார்த்துக்கிறேன். உன்னை ஜெயில்ல வச்சிட்டுதான் மறுவேலை’ன்னு சொல்லி மிரட்டுறான். அத்தையின் போயஸ் கார்டன் வீட்டிற்குச் சென்றால், அந்த வீட்டில் இருந்து பொருட்களை எடுத்து வருகிறேன் என்று பிரச்னை செய்கிறான். அப்படி எதுவும் நான் எடுத்து வரவில்லை.
எனக்கு யாரும் இல்லை கதறும் தீபா :
எனக்கு நாலே நாலு ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க. ஒரு அவசரம்னா உதவி செய்வாங்க. இப்போ அதுவும் மாதவன் கண்டிஷனால குறைஞ்சிப் போய்டுச்சி. திட்டவட்டமா என்னை வேண்டாம்னு சொல்லி டைவர்ஸ் கேட்கிறார். இரவானால் சண்டையிட்டு என்னை தூங்கவிடுவதில்லை. 12 மணிக்குத்தான் சண்டையை தொடங்குவார். நள்ளிரவில் நான் எந்த ஃப்ரண்ட்ஸைக் கூப்பிடமுடியும்?
யூடியூபில் எல்லோரும் என்னை தவறாக, ’உன் புருஷன் எங்கே?’.. ’நீ டிரைவரை வச்சிருக்கியா’ என்றெல்லாம் அவதூறு பரப்பினார்கள். காவல்துறையில் புகார் எல்லாம் கொடுத்திருக்கேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கலை. அந்தக் கமெண்ட்ஸ்களைக்கூட நீக்க வைக்கவில்லை. அரசியலில் வளரக்கூடாது என்று என் டிரைவருடன் தொடர்புபடுத்திப் பேசினார்கள். இதற்கு நிறைய பேருக்கு சம்பந்தம் இருக்கலாம்.
டிரைவர் ராஜா என கட்சியில் இருந்த அனைவரும் எப்போதே போய்விட்டார்கள். இப்படி அவதூறு பரப்புவதால் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்படும்? என்பதை மீடியாக்கள் யோசிப்பதில்லை. இதனாலேயே, எங்களுக்குள்ள நிறைய பிரச்சனை வந்திருக்கு. மீடியாக்களால் நான் அதிகம் பாதிக்கப்படுட்டுள்ளேன் என்று மனா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு தொடர்பில்லாத சில பிரச்சனைகள் குறித்து அடிக்கடி கருத்து வெளியிடுவது வழக்கம்.இந்த நிலையில் சுயேச்சைக் கட்சியை நடத்தி வரும் கணவர் மாதவனுடனான சர்ச்சைகள் தீராத அரசியல் போன்ற தனிப்பட்ட காரணங்களுக்காக அடிக்கடி செய்திகள் வருகின்றனர். பிரபலங்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படுவதால் அவர்களின் நிலை கேள்விகுறியாக்கியுள்ளது