பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடம் ஆகியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
கடுமையான யதார்த்தத்தை எதிர்கொள்வோம்: பாஜக ஆட்சியின் கீழ், இந்தியாவின் பத்திரிகை சுதந்திரம் பறிபோனது
பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் குறைந்த தரவரிசை, கவுரி லங்கேஷ், கல்புர்கி போன்ற பத்திரிக்கையாளர்களின் கொலைகள்;
அதிகாரத்தில் இருப்போரைப் பற்றி உண்மையை எடுத்துரைக்கும் சித்திக் காப்பான், ரானா அய்யுப் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்களுக்கு விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல்கள் போன்றவை பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடம் ஆகியுள்ளதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
ஜனநாயகத்தில்ஊடகத்தின் பங்கை போற்றும் அதே வேளையில், சுதந்திரமான பேச்சுரிமையின் மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கும், பத்திரிகையாளர்கள் அச்சமின்றி அல்லது அடக்குமுறை தணிக்கையின்றி பணியாற்றுவதை உறுதிசெய்வதற்கும் போராட உறுதியற்போம்.