கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து வரும் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் குறித்த பாடம் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி திமுக ஆட்சி காலத்தில் எழுதிய தமிழ் செம்மொழி பாடல் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பாடம் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்குப் கழித்து மீண்டும் கருணாநிதி எழுதிய பாடல் குறித்து பாடப்புத்தகத்தில் இடம் பெற உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய போது, கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்த பதிவுகள் பாடப்புத்தகத்தில் இடம் பெறும் என்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து வரும் கல்வியாண்டில் 9ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய சேவைகள், பங்களிப்புகள் உள்ளிட்ட விரிவான தகவல்கள் இடம்பெறும் என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இதற்கான பாடப்பகுதி முடிவு செய்யப்பட்டு பாட புத்தகங்கள் தற்போது அச்சிடும் பணியில் இருப்பதாகவும் விரைவில் பாடப்புத்தகம் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.