சீர்காழி அருகே பூம்புகார் கல்லூரி மாணவர்கள் நான்காவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து வாயிலில் அமர்ந்து போராட்டம் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து எடுத்து பூர்வமான உறுதி அளிக்க கோரி போராட்டத்தை தொடர்கின்றனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பூம்புகார் கல்லூரியில் 1300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இம்மானவர்கள் தங்களுக்கு குடிநீர்,கழிவறை,ஆய்வகம்,இறுக்கை உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கல்லூரி பேராசிரியர்கள் தங்களுக்கு பணி மேம்பாடு வழங்க கோரி போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியா உள்ளிட்டோர் கல்லூரியில் ஆய்வு செய்ததுடன் பேராசிரியர்களுடன் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் முடிவில் பேராசிரியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் வருவதாக அறிவித்து சென்றனர். அப்பொழுதே மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் 10 முதல் 15 நாட்களுக்குள் செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்திருந்தார்.
நேற்று பேச்சுவார்த்தையின் போது மாணவர்கள் யாரும் இல்லாத நிலையில் இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வாயிலில் அமர்ந்து மீண்டும் தங்களது கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது கல்லூரியின் பொறுப்பு முதல்வர் சிவசக்திவேல் மாணவர்களின் கோரிக்கை 10 முதல் 15 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த மாணவர்கள் தங்களுக்கு எழுத்துபூர்வமான உறுதிமொழி அரசு துறை சார்ந்த அதிகாரிகள் வழங்க கோரி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் அமைந்து நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.