மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான கருனாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வாழகத்தின் 39 கோடி ரூபாய் செலவில் கருணாநிதியின் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.அரசு சார்பில் நடந்து கொண்டு இருக்கின்ற நிலையில் நடுக்கடலில் 80 கோடி ரூபாய் செலவில் பேனா ஒன்றை 134 அடி உயரத்தில் நடுக்கடலில் அமைக்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த பிரம்மாண்ட கட்டுமானத்துக்கு ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்’ என்று பெயரிடப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இடத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொண்டு உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு, தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் எழுதி இருந்தது.
இந்த நிலையில், சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதல் கட்ட அனுமதி அளித்துள்ளது. திட்டம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சுழல் அனுமதியை பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.கருணாநிதி நினைவாக நடுக்கடலில் பேனா அமைக்கும் நிதி இருக்கும் அரசிடம் மக்கள் நல திட்டங்களுக்கு நிதி இல்லையா என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.