அதிமுக வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் கொளத்தூர் டி கிருஷ்ணமூர்த்தி, அதிமுக கே பி முனுசாமி ஒரு கோடி கேட்டு மிரட்டியதாகக் குற்றம் சாட்டி ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் கட்சி பதவிக்காக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியிடம் ரூ. 1 கோடி கொடுத்ததாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியின் குற்றச்சாட்டிற்கு, திட்டமிட்டு தன்னை அவமதிக்கும் வகையில் இந்த ஆடியோ வெளியிட்டுள்ளதாக கே.பி.முனுசாமி பதில் தெரிவித்துள்ளார்.
சென்னை களிம்பு வீட்டில் உள்ள வீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தைச் சந்தித்து விட்டு கொளத்தூர் டி கிருஷ்ணமூர்த்தி ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அவர்,
கட்சியின் தியாகி மாதிரி கோபி முனுசாமி பேசிக் கொண்டிருக்கிறார், தர்மத்தின் போது ஓபிஎஸ் மாதிரி ஒரு தலைவர் கிடையாது என்று கூறியவர் கே பி முனுசாமி தான் என்றும், 2021 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் தன்னிடம் சட்டமன்ற உறுப்பினர் சீட்டு வாங்கித் தருவதற்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும்,
அது குறித்தபடியோ காணொளி என்னிடம் உள்ளது என்றும் தற்போது ஆடியோவை வெளியிட்டுள்ளேன் இதற்கு இவர் பதில் கூறவில்லை என்றால் அடுத்து காணொளியும் ரிலீஸ் செய்வேன் என்றும், இது கே பி முனுசாமிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும், அதற்குள் அவர் பதில் அளிக்க வேண்டும்.
மேலும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி என்பவர் பதவி இல்லாத பழனிச்சாமி என்றும் குற்றம் சாட்டினார். நீங்கள் ஏன் லஞ்சம் கொடுத்தீர்கள் என்று நிருபர் கேள்வி கேட்டதற்கு, கோபி முனுசாமிக்கு நான் பணம் கொடுத்தது தவறாகத் தெரியவில்லை, அப்போதைய சூழலில் காரியம் நடந்தால் போதும் என்று நினைத்ததாகவும் பதில் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் ஆடியோ குறித்து கே.பி. முனுசாமியிடம் கேட்ட போது, ‘திட்டமிட்டு தன்னை அவமதிக்கும் வகையில் இந்த ஆடியோ வெளியிட்டுள்ளதாகவும், ஓபிஎஸ்யின் தூண்டுதலின் பேரில் கிருஷ்ணமூர்த்தி இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளதாகவும் உண்மை என்னவென்று கிருஷ்ணமூர்த்திக்கே தெரியும் எனவும் கே.பி. முனுசாமி பேட்டியளித்துள்ளார்.