நாளை தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரிவுப்படுத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் நாட்டின் 2024 2025 கான பொது பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வேளாண் பட்ஜெட் பிப்ரவரி 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு ஒவ்வொரு துறை ரீதியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்பட்டு அந்தந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது என்பது மரபு. அதன் அடிப்படையில் நாளை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது.
இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. முன்னதாக 24ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது . இந்த சூழலில் முன்கூட்டியே சட்டப்பேரவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ”ராகுல்காந்தியின் பிறந்தநாள்..” வீடியோவில் அசத்திய முதலமைச்சர் ஸ்டாலின்!
அதன்படி நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. இந்த கூட்டத் தொடரில் விக்ரவாண்டி எம்எல்ஏ புகழேந்திக்கு இரங்கல் தெரிவித்து நாளைய கூட்டம் ஒத்திவைக்கபடுகிறது.
இதனைத் தொடர்ந்து 21 ஆம் தேதி முதல் . 29 தேதி வரை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டதொடரில் முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று எதிரப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தளர்வுகள் கொண்டு வரவேண்டும் என மகளிர் கோரிக்கை விடுதிருந்தனர்.
மேலும் நாளை தொடங்கும் சட்டமன்ற கூட்டத் தொடரில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரிவுப்படுத்துவது , தளர்வுகள் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.