விஜயபிரபாகரன் தோற்கவில்லை.. தோற்கடிக்கப்பட்டுள்ளார் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கோயம்பேடு அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், இன்று தேமுதிக கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிறப்பாக பணியாற்றி நல்ல ஒரு வாக்குகளை பெற்றுள்ளனர். ஆனால் சென்னையில் மட்டும் தான் தேமுதிக பார்த்தசாரதி மட்டும் தான் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார்.
தஞ்சாவூரில் சிவனேசன், கடலூரில் சிவக்கொழுந்து, குறிப்பாக விருதுநகரில் விஜய பிரபாகரன் கடைசிவரையில் களத்தில் ஒரு வெற்றி வீரராக தன்னுடைய அனைத்து முயற்சிகளையும் எடுத்து கடைசி அவர் தோல்வி அடைந்தார் என அறிவிக்கப்பட்ட உள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,” உறுதியாக உங்களிடம் நான் கூறுகிறேன் விஜய பிரபாகரன் தோல்வி அடையவில்லை தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை அவர் வீழ்த்தப்பட்டுள்ளார் இதுதான் உண்மை இது அத்தனை மக்களுக்கும் ஊடகத்தை சேர்ந்தவர்களுக்கும் தமிழகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் இது தெரியும் என்று பிரேமலதா தெரிவித்தார்.
மேலும் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு நாங்கள் முழு மனதாக ஏறக்கிறோம். தேர்தல் எங்களுக்கு புதியது இல்லை எத்தனை தேர்தலை சந்தித்து உள்ளோம். தொடர்ந்து தேமுதிக அதிமுக கூட்டணியுடன் இணைந்து செயல்படும் என்பதை தெரிவித்தார்.
விஜயபிரபாகரன் தோற்கவில்லை.. தோற்கடிக்கப்பட்டுள்ளார் பிரேமலதா கொடுத்த விளக்கம்:
எனக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் பல்வேறு இடங்களில் இருந்து தனக்கு நிர்பந்தப்படுத்துவதாகவும், என்னால் இதை சமாளிக்க முடியவில்லை அதனால் என்னுடைய மொபைலை சுவிட்ச் ஆப் செய்கிறேன் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெருவில் உள்ளார் மாவட்ட ஆட்சியருக்கு யார் அழுத்தம் கொடுத்தது யார் ? மாவட்ட ஆட்சியர் அவர்களே நடு மையத்திற்கு வந்து அறிவித்துள்ளார்.
தேர்தல் என்றால் அது உண்மையாக நடந்தால் அது தேர்தல். எந்த ஒரு தேர்தலும் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் 40 தொகுதிகளையும் திமுக வென்றது என்று சொல்லி இருக்கிறார்.
அவர் சொல்லுவதற்கு முன்பாக தான் அதுவரை நான்கு தொகுதிகளிலுமே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முதலமைச்சர் விளக்கம் கொடுத்தாக வேண்டும்.
மேலும் விருதுநகர் தொகுதியில் வாக்கு என்னும் மையத்தில் நள்ளிரவில் மாணிக் தாகூர் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் வெற்றி சான்றிதழ் பெறுகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.
மேலும் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான கோரிக்கைக்கு அதிகாரிகள் யாரும் சேவி சாய்க்கவில்லை. விருதுநகரில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தபட வேண்டும் என தேர்தல் ஆணையதிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.