திமுக தலைவர்களின் கல்வித் தகுதி குறித்து கேள்வி எழுப்பிய பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நட்டா நேற்று மதுரை சென்று அங்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜே.பி.நட்டா, தமிழக திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். திமுக அரசு வம்ச அரசியலை நடத்துவதாக நட்டா விமர்சித்தார்.
நட்டா தனது உரையில், “தேசிய கல்விக் கொள்கையை அவர்கள் (திமுக) எதிர்ப்பதாக என்னிடம் கூறப்பட்டது. நான் (மத்திய) சுகாதார அமைச்சராக இருந்தபோது, நீட் தேர்வை எதிர்த்தார்கள். உண்மையில், படிக்காத தலைவர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கும்போது, அவர்கள் கல்வியைப் பற்றி பேசினால், இதுதான் நடக்கும்.
“நீங்கள் படிக்காமல் கல்வியைப் பற்றி பேசினால், நீங்கள் இப்படித்தான் கருத்து தெரிவிக்கிறீர்கள். நீட் தேர்வால் கிராம மக்கள் கல்வி கற்க முடியும். பின்தங்கிய மக்கள் மருத்துவப் படிப்புகளை படிக்க முடியும். பல கிளைகளைச் சேர்ந்தவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர முடிகிறது” என்று நட்டா விமர்சித்தார்.
திமுக தலைவர்கள் படிக்காதவர்கள் என நட்டா விமர்சித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ட்விட்டரில் இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “2 நாடுகளில் 3 பல்கலைகழகங்களில் 4 வெவ்வேறு படிப்புகளில் சர்வதேச தரத்தில் பல தேர்வுகளை எழுதி 4 பட்டங்கள் பெற்ற எனக்கு கல்வி தகுதி இல்லை” என ஜேபி நட்டா கூறியுள்ளார்.
4 degrees in 4 different majors from 3 Universities in two countries, after clearing multiple international standardized tests – still can’t clear JPN cut-off for “educated”😢
If only I’d opted for a degree in “Entire Political Science” instead, perhaps I’d have made the cut🤔 https://t.co/r5cbGYRikn
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) September 23, 2022
ஒரு வேலை பிரதமர் நரேந்திர மோடி படித்த ‘Entire Political Science’ படிப்பில் பட்டம் பெற்றிருந்தால் படித்தவர் என சொல்லியிருப்பார்” என கேலி செய்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திமுக தலைவர்கள் நன்கு படித்தவர்கள். முதல்வர் ஸ்டாலின் இளங்கலை பட்டதாரி, அமைச்சர் மா. சுப்பிரமணியன் பி.ஏ., எல்.எல்.பி., செந்தில் குமார் எம்.பி டாக்டர், அமைச்சர் பொன்முடி எம்.ஏ வரலாற்றில், நிதி அமைச்சர் பி.டி.ஆர் 4 பட்டம் மற்றும் பிஎச்.டி.படித்துள்ளனர்.
எனவே, நட்டாவின் கருத்துக்கு திமுக கடும் பதிலடி கொடுத்து வருகிறது. கல்வியில் பின்தங்கிய வட இந்தியாவில் இருந்து வரும் உங்களால் தமிழக தலைவர்களை பற்றி பேச முடியுமா என கிண்டல் செய்கின்றனர்.