கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதனை சபாநாயகர் நிராகரித்ததால், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை 21 ஆம் தேதி முதல் . 29 தேதி வரை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. அந்த வகையில் கூட்டத்தொடரின் முதல் நாளில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2வது நாளான நேற்று தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்துடன் தொடங்கியது.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து பேரவைக்குள் நுழைந்தனர். மேலும் கேள்வி நேரம் தொடங்கிய சில மணி நேரத்தில் , அதிமுக எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் ஏ.வ.வேலு பதிலளிக்க முனைகையில், அதிமுக, பாமக, பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சபாநாகர் அப்பாவுவின் எச்சரிக்கையை மீறி அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றபட்டனர்.
இந்த நிலையில் சட்டப்பேரவையின் மூன்றாவது நாள் கூடியது. இன்றும் கருப்பு சட்டையை எதிர்க்கட்சியினர் அணிந்து வந்தனர் . அப்போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு கள்ளச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது சபாநாயகர் நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது. பேச வேண்டிய நேரத்தில் அனுமதி தருகிறேன் என கூறினார். ஆனால் அதை ஏற்காமல் அதிமுக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.