தமிழகத்தில் மே 15 முதல் 20 வரை சூறாவளி காற்றின் எதிரொலியாக கடலோர பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் கடந்த சில சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் கடும் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ – நடிகை அமலா பால் Ramp Walk!
இந்நிலையில் தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி தமிழகத்தில் மே 15 முதல் 20 வரை சூறாவளி காற்றின் எதிரொலியாக கடலோர பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் வட கடலோர பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.