பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தூண்டுதலுக்கு அம்பேத்கர் இரையானார் என்று ஆளுநர் மாளிகையிலேயே ஆளுநர் பதிவு செய்து, அம்பேத்கரை இழிவு படுத்துகிறார் என வி.சி.க எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், அண்மையில் இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் “எண்ணித் துணிக” என்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களின் கேள்விக்கு விளக்கம் அளித்தார்.
அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வெளிநாட்டு நிதியில் நடைபெற்றது என்று பேசியிருந்தார். அவருடைய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்தால் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ஆளுநரின் பேச்சுக்கு முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவந்தனர். அதனைத் தொடர்ந்து, ஆளுநர் தரப்பிலிருந்து அவருடைய பேச்சு குறித்து முழு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தநிலையில்,
“தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இந்த கூட்ட தொடரில் 2வது முறையாக ஆளுநர் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரபட்டு ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றபட்டது.
அப்போது பேசிய,வி.சி.க எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன் பிரிட்டிஷ் ஏகாதியபத்தியத்தின் தூண்டுதலுக்கு அம்பேத்கர் இரையானார் என்று ஆளுநர் மாளிகையிலேயே ஆளுநர் பதிவு செய்து, அம்பேத்கரை இழிவு படுத்துகிறார்.
இந்த அவையின் இறையாண்மையை மறுப்பது என்பது ஜனநாயகத்தை மறுப்பதாகும்மதச்சார்பின்மை, சமூக நீதி என்ற கோட்பாட்டுக்கு எதிராகவும் வெளிப்படையாக ஆளுநர் பேசி வருவது வேதனைக்குரியது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.