இன்றைய காலகட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் இவற்றுக்கு மவுசு கூடி வரும் வேளையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு நிறுவனங்களும் தங்களுக்குள் போட்டி போட்டு புதுப்புது உத்திகளை வியாபாரத்தில் கையாண்டு வருகின்றன.
வேலைக்குச் சென்று வரும் கணவன் மனைவிக்கும் பணிக்குச் சென்று கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இந்த ஆன்லைன் உணவுகள் பெரிய வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
இந்த நிலையில் பிரபல உணவு டெலிவரி நிறுவனம் ஐஸ்க்ரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்த நபருக்கு காண்டம் டெலிவரி செய்து சர்ச்சையில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி.இவர் தனது குழந்தைகளுக்காக ஸ்விக்கியில் ஐஸ்க்ரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்திருக்கிறார் அதில் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக, அவருக்கு காண்டம் பாக்கெட்டுகளை அந்த உணவு நிறுவனம் டெலிவரி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில்,ஸ்விக்கியில் புகார் தெரிவித்தார்.
இது தொடர்பாக பெரியசாமியிடம் கேட்டபோது,’நேற்று இரவு குழந்தைகள் கேட்டனர் என்பதற்காக ஸ்விக்கியில் 2 ஐஸ்க்ரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்தேன். டெலிவரி பாய் சிறிய பாக்கெட்டில் கொடுத்தார். அப்போதே சந்தேகத்துடன் திறந்து பார்த்தபோது, காண்டம் இடம்பெற்றிருந்தத‘டெலிவரி தவறாக கொடுத்திருக்கிறீர்கள்,
இதை ரிட்டர்ன் எடுத்துக்கொண்டு, என்னுடைய ஆர்டரை எனக்கு டெலிவரி செய்யுங்கள்’ எனக் கூறினேன். ஆனால் அந்த டெலிவரி பாய், ‘இதை ரிட்டர்ன் எடுக்கும் அதிகாரம் எனக்கில்லை, வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளியுங்கள்’ என கூறிச் சென்றுவிட்டார்.
அதனால் இது போன்ற தவறுகள் ஆன்லைன்ஆர்டர்களில் நடக்கின்றனர் என்பதற்காக தான் ட்விட்டரில் பதிவிட்டிருந்தேன்.என்ன ஆர்டர் செய்தோமோ அதைத்தானே கொடுக்க வேண்டும். இவர்களாக ஒரு பொருளை கொடுப்பதும், கேட்டால் பணத்தைத் திருப்பியளிப்பதும் என்ன மாதிரியான சேவை. மன வேதனை அடைந்துள்ளார்.