பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத்,உபி,ம.பிரதேசம் போன்ற பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கானோர் விஷச் சாராயம் குடித்து பலியானார்களே; அப்போது அங்குள்ள ஆளுநர்கள் இப்படி விஷமத் தனத்தோடு அரசிடம் விளக்கம் கேட்டு அறிக்கை வெளியிட்டனரா? என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
அரசியல் தெளிவு வரலாறுகள் அறியாத ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டு அவர் செய்யும் அலப்பறைகள் அவ்வளவு கிடைக்கின்றன தமிழ்நாட்டில் விஷவாயு குடித்து பலர் உயிரிழந்த வேதனையில் அரசியல் நடத்திட சில அரசியல் ஆத்திரக்காரர்கள் முற்பட்டு உள்ள நிலைகள் நமது ஆளுநரையும் தன் பங்குக்கு அந்த துயர சம்பவத்தில் விளம்பர வெளிச்சம் தேடும் உட்பட்டுள்ளார். அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று ஊடகங்களிலும் செய்து தாள்களிலும் முக்கியத்துவம் கொடுத்து வெளிப்பட்டுள்ளன.
அறிக்கை கேட்ட ஆளுநர்:
ஆளுநர் விரிவான விளக்கு அறிக்கை கேட்பதில் என்ன தவறு என்று ஒரு சிலர் கேட்கட்டும் ஆளுநர் கேட்பதில் தவறு இல்லை. கேட்ட விதம்தான். அவர் எத்தனையோ விஷமத்தனத்தோடு விஷம் கக்கி உள்ளார் என்பதை வெளிப்படையாகத் தெரிகிறது நடந்தவை குறித்து முழு விபரங்களை அரசின் மூத்த அதிகாரி தொலைப்பேசியில் நேரிலோ அழைத்து அறிந்து கொள்ள ஆளுநரால் முடியும் என்றாலும் அப்படிச் செய்யாதது அதனை ஒரு அறிக்கையாக வெளியிட்ட ஊடகங்களுக்கு அனுப்பித் தான் ஏதோ பெரிய செயலை செய்து விட்டதாக என்னும் சிறுபிள்ளைத்தனம் தான் ஆளுநர் நெஞ்சமெல்லாம் எவ்வளவு வஞ்சம் உள்ளது என்பதை உணர்த்துகிறது.
மேலும் இந்த கேள்விகளை அரசிடம் எழுப்பும் முன் பாரத ஜனதா ஆட்சி செய்யும் பெறும் குஜராத் உத்தரப்பிரதேசம் மத்தியப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கானோர் விசு சாராயம் குடித்துப் பலியானார்கள் அப்போது அங்குள்ள ஆளுநர்கள் இப்படி விஷமத்தனத்தோடு ஆளும் பாஜக அரசிடம் விளக்கம் கேட்டு அறிக்கை வெளியிட்டாரா என்பது யாது கேட்டது இருக்க வேண்டுமா?
குஜராத் மாநில மதுவிலக்கு:
மேலும் இந்த நேரத்தில் மக்கள் மத்தியில் தனது இருப்பைக் காட்டிக் கொள்ள ஆளுநர் ரவி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் விளம்பரம் தெரியாத நாலாம் பேர அரசியல்வாதி போலக் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்.
இதுபோன்று இரண்டாயிரம் பேரை ஏன் கைது செய்ய வேண்டும் எனக் குஜராத் ஆளுநருக்கு ஒரு தொலைப்பேசி போட்டுக் கேட்டிருந்தால் அவர் விலக்கி இருப்பார் குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது காந்தி பிறந்த அந்த மாநிலத்தில் காந்தியர் பிறந்த இடத்துக்கு அருகில் எல்லாம் கள்ளச்சாராயம் வழி சிறப்பாக விற்பனை செய்வதாகப் பல நேரங்களில் புகைப்பட ஆதாரங்களுடன் செய்திகள் வந்தன.
அந்த குஜராத் மாநிலத்தில் ஆளுநர் ரவிக்கு இஷ்டமான பாஜக கட்சியின் ஆன்மீக அரசியல் தான் பல ஆண்டுகாலமாக நடந்து வருகிறது. எல்லாம் அறிந்த அதிமேதாவியாகத் தன்னை கருதிக் கொண்டு அப்போது செயல்பட்டு வரும் ஆளுநர் ரவிக்கு இது தெரியாததிருக்க நியாயம் இல்லை அங்கே அதாவது பிஜேபியாவின் மதுவிலக்கு அமலில் உள்ளது.
குஜராத் மாநிலத்தில் விஷச்சாராய பலி:
குஜராத் மாநிலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு விஷச்சாராயத்துக்கு 42 பேர் பலியானதாகவும்,நூற்றுக்கணக்கானோர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்ப தாகவும், பலர் கண் பார்வையைப்வெளிவந்தபறிகொடுத்ததாகவும்
செய்திகள் ஆளுநர் ரவிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்!
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் காவல் துறையினர் 2500 பேரை கைது செய்ததாகவும், ஏறத் தாழ 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளச்சாராயத்தைக் கைப்பற்றி யுள்ள தாகவும் ஏடுகளில் கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளிவந் ததை ஆளுநர் ரவி அறிந்தேயிருப் பார்; ஏனென்றால் அவர் மெத்தத் தெரிந்த மேதாவி!
“மதுவிலக்கு அமுலில் இருக்கும் மாநிலத்தில், அதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திவரும் நிலையில் இவ்வளவு பேரை அதாவது 2500 பேரை கைது செய்ய அவசியம் ஏன் ஏற்பட்டது” – என்று கேள்வி கேட்டு அது குறித்து அறிக்கை தாக்கல் செய்யக்கோரி கடிதம் எழுதி அதனை ஏடுகளுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்ததாக செய்திகள் வெளிவந்ததாகத் தெரியவில்லை.
ஆளுநர் ரவி விளம்பர வெளிச்சத் தில் இருக்க நினைத்தால், தனது பதவியைத் துறந்து அண்ணாமலை போல ஏதாவது ஒரு மாநிலத்தின் பி.ஜே.பி. தலைவராக ஆகிவிடலாம். அதைவிடுத்து தாறுமாறாகச் செயல் பட்டு ஆளுநர் பதவிக்குரிய தகுதி யைச் சீரழிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருவதை நிறுத்துவது நாட்டுக்கு நல்லது என கடுமையாக விமர்சித்து இருந்தது.