நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை அறிவிக்க வந்த திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்களுடன் (photographers) சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
சென்னை கலைஞர் அரங்கில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக தொகுதிகள், வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கைகளை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த அவர், செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் கூட்டமாக் இருப்பதைப் பார்த்ததும், நேரடியாக அவர்களை நோக்கிச் சென்றார்.நலம் விசாரித்தபடி அங்கிருந்த புகைப்படக் கலைஞர்களுடன் பேசிவிட்டு மேடைக்கு செல்ல முயன்றார்.
அப்போது பத்திரிகையாளர்கள் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அவர்களோடு சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது ஊடகவியலாளர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
வழக்கமாக செய்தியாளர்கள் சந்திப்பின்போதோ அல்லது ஸ்டாலின் பங்கேற்கும் திமுக நிகழ்ச்சிகளிலோ அங்கிருக்கும் செய்தியாளர்களை சினேகப் புன்னகை பூத்தபடி கடந்து செல்லும் ஸ்டாலின்,
நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்துத்தான் ஊடகவியலாளர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தாரா என்னும் கமெண்ட்களும் வெளியாகியது.