விபூதி சித்தர் என்று அழைக்கப்படும் மகாதேவமலை மகானந்த சித்தரை திமுகவின் மூத்த அமைச்சர்கள் ஆன kn நேரு மற்றும் துரைமுருகன் ஆகியோர் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த காங்குப்பம் கிராமம். இது தமிழக நிறுவனத்துறை அமைச்சரின் சொந்த கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் அருகே உள்ள மகாதேவர் மலையில் மகானந்த சித்தர் என்பவர் சிவன் கோவிலைக் கட்டி உள்ளார்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளைக் கலந்து கொள்வதற்காக வந்த நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் நகராட்சி நிர்வாகத்து அமைச்சர் கே என் நேரு நேரில் சென்று சந்தித்தனர்.
இதனை எடுத்து அமைச்சர் பெருமக்களைச் சித்தர் சால்வை அணிவித்து வரவேற்று அவர்களுக்கு விபூதி அளித்து ஆசீர் வழங்கினார்.
இன்றைக்குக் கிண்டல் செய்யும் விதமாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி விபூதி சித்தரிடம் சரணடைந்த திமுக அமைச்சர்கள் என tag செய்து விட்டதில் பதிவிட்டுள்ள தற்பொழுது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.