மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி உயர் நீதிமன்ற கிளையில் நிர்ம்லா தேவி மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், உயர் கல்வித்துறையிலும் இருந்து வந்த நிர்மலா தேவி, கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தை கூறி உயர் கல்வித்துறையில் உள்ள முக்கிய நபர்களுக்கு பாலியல் ரீதியாக மாணவிகளைப் பயன்படுத்த முயன்ற ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பின்னர், 2018 ஏப்ரலில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
அதன்பின், இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதி பகவதி அம்மாள் முன்பு, மூவர் மீதும் 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன.
மேலும் 100க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. மேலும், இருதரப்பு வாதங்கள் மற்றும் விசாரணைகளும் நிறைவு பெற்ற நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: ”மதுரை சிறையில் அடைக்கப்பட்ட நிர்மாலா தேவி..”நாளை வெளியாகும் தண்டனை அறிவிப்பு!
மேலும், பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் குற்றவாளி இல்லை என்று அவர்களை விடுவிடுத்துள்ளனர்.இதனையடுத்து குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிர்மலாதேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து நிர்மலா தேவிக்கு சிறைத்தண்டனை உறுதியான நிலையில், உதவிப் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.இதை ரத்து செய்யக் கோரியும், அதுவரை இடைக்கால ஜாமின் கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் அவர் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.