நமக்கு எதிரி தி.மு.க.தான். அதிமுக, திமுக இடையே தான் போட்டி உள்ளது. பா.ஜ.க.வுக்கு 5 சதவீத வாக்குகள் தான் உள்ளன என உதகையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார்.
நாடுமுழுவதும் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி,தமிழ் நாட்டில் ஏப்ரல் 19-ம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக தமிழ்நாட்டில் உள்ள திமுக ,அதிமுக , தேமுதிக ,பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிமுக கூட்டம் உதகையில் நேற்று நடைபெற்றது.
அந்த கூட்டத்தில், அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு, நீலகிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வனை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,” லோகேஷ் தமிழ்ச் செல்வன் மக்களுக்கான வேட்பாளர். இதுவரை திமுக., கூட்டணியில் 38 எம்.பி.,க் கள் இருந்தனர்.
ஆனால் தமிழ் நாட்டுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. நாம் அறிவித்த திட்டங்களைத் தான் நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: ”அம்மா வழியில்.. சிறுபான்மையின மக்களின் பாதுகாவலர் EPS…”-எஸ்.பி.வேலுமணி!!
நமக்கு எதிரி தி.மு.க.தான். அதிமுக, திமுக இடையே தான் போட்டி உள்ளது. பா.ஜ.க.வுக்கு 5 சதவீத வாக்குகள் தான் உள்ளன. அது தற்போது 10 சதவீதமாக அதிகரித்திருக்கலாம்.
அது ஒரு பொருட்டில்லை. தி.மு.க. ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மக்கள் தெளிவாக உள்ளனர்.
எப்போது சட்டப்பேரவைத் தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் தான் முதலமைச்சராக வருவார். எடப்பாடியார் பொதுச் செயலாளராக ஆன பின்பு நடைபெறுகின்ற முதல் பொது தேர்தல் இந்த தேர்தல்.
எனவே அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக இருந்து பூத் கமிட்டி சிறப்பாக பணியாற்றி ஒவ்வொரு பூத்திலும் 350 வாக்குகளுக்கு குறைவில்லாமல் வாங்க வேண்டும் என்று கூறினார்.