தமிழ்நாட்டில் உள்ள 25 உழவர் சந்தைகளில் மரபுசார் ஊட்டச்சத்து நிறைந்த தொன்மை சார்ந்த உணவகம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
வேளாண்மை நிதி நிலை அறிக்கையில்,தொன்மை மிக்க ஊட்டச்சத்து நிறைந்த, சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகள் போன்ற உணவுகளை வழங்கி நுகர்வோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பான அரசாணையில், ‘மதுரை, நெல்லை, திருச்சி, கோவை, ஈரோடு கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொன்மை சார் உணவகம் அமைக்கப்படுகிறது.சிறுதானிய சிற்றுண்டிகள், கூழ் வகைகள் போன்ற மரபு உணவுகளை இந்த உணவகங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.