தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை.யில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர வரும் ஜூன் 3ம் தேதி முதல் இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஆனால், கால்நடை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே நடைபெற உள்ளது. மருத்துவப் படிப்புகளில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பது உண்டு.
பிற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், நிகழாண்டு கால்நடை மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆர்வம் காட்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை.யில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர வரும் ஜூன் 3ம் தேதி முதல் இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குறைந்து போன தேர்ச்சி விகிதம்; என்னாச்சு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு?
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் : தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc & AH/ BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் (online applications), பல்கலைக்கழக இணையதளம் (https://adm.tanuvas.ac.in) 03.06.2024 10.00 21.06.2024 0 5.00 1 வரவேற்கப்படுகின்றன.
அயல்நாடு வாழ் இந்தியர் (NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டினர் (Foreign National ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.