Gudiyatham lake death-குடியாத்தத்தில் ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வேப்பூர் பகுதியில் முனீஸ்வரன் கோயில் உள்ளது. இங்கு தங்கம் நகரைச் சேர்ந்த சரோஜா, அவரது மகள் லலிதா, சகோதரிகள் காஜியா, ப்ரீத்தி ஆகிய 4 பெண்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தேனி அருகே கார் விபத்தில் 3 ஐயப்ப பக்தர்கள் உயிரிழப்பு..!!
இதன் பின்னர், அருகில் உள்ள வேப்பூர் ஏரியில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக 4 பேரும் ஏரி நீரில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.