சென்னை இராயப்பேட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ஆகியோர் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அருமையாக இருந்தது. கல்கி நாவல் தழுவிய படமாக எடுக்கபட்டுள்ளது. மேலும் தி கேரளா ஸ்டோரி திரையிடபடுவதற்க்கு அர்ஜுன் சம்பத் வரவேற்ப்பு தெரிவித்துள்ளார். The Kerala Story திரைப்படம் தீவிரவாதத்தை அம்பலப்படுத்தும் படம். தீவிரவாதத்தின் உண்மையை காட்டுகிறது.என்று தெரிவித்தார்.
பின்னர்,தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தனியார் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தது குறித்து செய்தியாளர் கேள்விக்கு,
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தனியார் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், திமுக அரசு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். குறிப்பாக, “ஒரே நாடு ஒரே பாரதம் கொள்கைக்கு எதிராக இந்த திராவிட மாதிரிக் கொள்கை உள்ளது. திராவிட மாதிரி என்பது காலாவதியான கொள்கை. அதை சீரமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என்றார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அவர் கூறிய கருத்துக்களுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அப்போது, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், “இந்தியாவின் ஒற்றுமையை கவர்னர் வலியுறுத்தலாம். திராவிட மாதிரி இந்திய ஒற்றுமைக்கு எதிராக செயல்படுகிறது. அதை தொழிற்சங்கம் என்று அழைப்பது தவறு. ஆளுநர் தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறார். திராவிட முன்னேற்றக் கழக அரசும், தற்போது இருக்கக்கூடிய பிரிவினைவாத சக்திகளும் அவருக்கு பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர். அதையெல்லாம் மீறி அரசியல் சட்டப்படி தன் கடமையை செய்து வருகிறார். தேசத்தின் சார்பாகப் பேசுகிறார். தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் வைத்திருக்க கவர்னர் விரும்புகிறார். பிரிவினை அதிகாரம், ஊழல் அதிகாரம், தமிழகத்தை கொள்ளையடிக்கும் இந்த சக்திகள் வீழ வேண்டும் என்று கவர்னர் நினைக்கிறார் என அர்ஜுன் சம்பத் தெரிவித்து உள்ளார்.