குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்த நிலையிலும் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.
தென்காசி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் மாவட்டத்தில் கனமழை மற்றும் மிகவும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விரக்தியில் வீண்பழி சுமத்தும் பிரதமர் மோடி – முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.
மேலும் இதே போல் பழைய குற்றால அருவியிலும் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்தபடி ஓடினர். அப்போது, நெல்லையை சேர்ந்த 17வயது சிறுவன் அஸ்வின், வெள்ளித்தில் இழுத்துச் செல்லப்பட்டார். தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சிறுவனை தேடினர். இந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.
இதையடுத்து குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது வெள்ளப் பெருக்கு குறைந்த நிலையிலும், பொதுமக்கள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.