பாகிஸ்தானில்(pakistan )பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைக் குற்றங்கள் “கற்பழிப்பு, கொலை, ஆசிட் தாக்குதல்கள், குடும்ப வன்முறை மற்றும் கட்டாயத் திருமணம் உள்ளிட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் பாகிஸ்தான் முழுவதும் பரவலாக உள்ளது.
அட்டாக் மாவட்டத்தில் உள்ள சிறை ஊழியர்கள், கைதிகளைப் பார்க்க வரும் பெண்களை பாலியல்(raped )பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின்(pakistan) பஞ்சாபின் அட்டாக் மாவட்டத்தில் உள்ள சிறை ஊழியர்கள், கைதிகளைப் பார்க்க வரும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக மாகாண புலனாய்வு மையத்தின் (PIC) அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
அட்டாக் சிறை வளாகத்தில் சக்திவாய்ந்த மாஃபியாக்கள் இருப்பதால் போதைப்பொருள் பயன்பாடு பரவலாக இருப்பதாக அறிக்கை மேலும் வெளிப்படுத்தியுள்ளது. மாவட்ட சிறையின் விவகாரங்கள் குறித்து விசாரித்து, பிஐசி களப்பணியாளர்கள் செப்டம்பர் 30ஆம் தேதி சிறைத்துறை காவலர் அறிக்கையை சமர்ப்பித்து உள்ளார்.
இந்த நிலையில்,கைதிகளாக அடைப்பட்டிருப்பவர்களை பார்க்க வரும் பெண்களை சில சிறை ஊழியர்களே பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர் என சிறை பணியாளர் ஒருவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் சிறை ஊழியர்களின் கொடுமை இதனால், பஞ்சாப் நிர்வாகத்தின் கையாலாகாத செயல்பாட்டின் வெளிப்பாடாக இந்த சம்பவம் அமைந்துள்ளதுடன், வருங்காலத்தில் அவதூறுக்கும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, கூடுதல் செயலாளர் மட்டத்திலான உயரதிகாரி தலைமையில் அதிக ஆற்றல்மிக்க கமிட்டி, இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தும்படியும், உளவு துறை ஊழியர் வலியுறுத்தி உள்ளார்.
இதுதவிர, கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் “கைதிகளில் ஒருவரைப் பார்ப்பதற்காகச் சிறைக்குச் செல்லும் ஒரு சிறுமி, கைதிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்கிறாள். வெளியில் ரூ.500 மதிப்புள்ள சரஸ் மூட்டை ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை சிறைக்குள் விற்கப்படுகிறது” என்று அறிக்கை கூறுகிறது.
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சக்திவாய்ந்த மாஃபியாக்கள் சிறை நிர்வாகத்தின் ஆதரவுடன் சிறைக்குள் தொடர்பை கொண்டு உள்ளதாகவும் சட்டவிரோத பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் இது போன்ற சம்பவங்கள் நடந்த வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ,பாகிஸ்தானிய சமூகத்தில் ஒரு பெண் தனது பாலினத்தின் காரணமாக பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தண்டிக்கப்படுவோமோ என்ற பயம் இல்லாமல், குற்றம் சாட்டப்படுவார்கள் என்ற பயம் இல்லாமல் இதுபோன்ற குற்றங்களைச் செய்யும் ஆண்களால் கௌரவத்தின் பெயரால் பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான ஆறாவது நாடாக இந்த நாடு கருதப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.