தென் பசிபிக் நாடுகளில் ஒன்றான லாயல்டி தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.7 ஆக பதிவானது.
தென் பசிபிக் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வனுவாதூ, ஃபிஜி மற்றும் நியூ கேலடோனியா நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியே 38 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.