நியூசிலாந்து நாட்டின் ஆல்-ரவுண்டரான காலின் டி கிராண்ட் ஹோம் ( colin de grandhomme ) இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் நியூசிலாந்து அணியில் 2012 ஆம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1400 ரன்கள் அடித்துள்ளார், மேலும் 45 ஒருநாள் போட்டியில் பங்குப்பெற்று 740 ரன்களும், 41 t20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 503 ரன்களும் குவித்துள்ளார்.
சமீபகாலமாக அவர் சரியான முறையில் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறவில்லை, கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் பங்கு பெற்றதே இவர் இறுதியாக பங்குபெற்ற சர்வதேச போட்டியாகும்.
தனது ஓய்வு குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியதாவது. “நான் இந்த காலம் வரை இளமையாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். மேலும் இப்போதுள்ள பயிற்சிகள் மிக கடுமையாக உள்ளது. காயங்களோடு பயிற்சி மேற்கொள்வது மிக மோசமான விஷயம். இத்தனை ஆண்டு காலம் நியூசிலாந்து அணிக்காக ஆடியது பெருமையாகவுள்ளதென்று” கூறியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பிருந்தே தனது குடும்பம் பற்றியும் கிரிக்கெட்டுக்கு பின்னர் தனது வாழ்க்கை பற்றியும் யோசித்து வந்ததாகவும் , கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.