பஞ்சாப், ஹரியாணா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காலிஸ்தான் தொடர்புடைய 50 இடங்களில் என்ஐஏ(NIA) சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கனடா வில் கடந்த ஜூன் மாதம் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் இந்தியா – கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதற்குப் பதிலடி தரும் விதமாக டெல்லியில் உள்ள கனடா தூதரை நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டது. மேலும், கனடாவைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய விசா வழங்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் இந்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில், 2017ல் இந்தியாவில் என்.ஐ.ஏ அமைப்பு தேடி வந்த சுக்தூல் சிங்கை கனடாவில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இந்த நிலையில், பஞ்சாப், ஹரியாணா, டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது. காலிஸ்தான் பிரிவினைவாத குழுக்களுடன் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்து இந்த சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவிக்கையில், வெளிநாட்டில் உள்ள காலிஸ்தான் போன்ற பிரிவினைவாத ஆதரவுக் குழுக்கள் சில இந்தியாவில் சிலரை அடையாளம் கண்டு ஹவாலா மூலமாக பணப் பரிவர்த்தனை செய்து போதைப் பொருட்கள், ஆயுதங்கள் வாங்க இங்குள்ள சிலரை ஊக்குவிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.