திருநெல்வேலி மாவட்டம் இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் இஞ்ஜினை சோதித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.
விண்வெளி பயணத்திற்கு வழக்கமாக பயன்படுத்தப்படும் ராக்கெட் என்ஜின்களை விட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்கள் மற்றும் மிகவும் சிக்கலான விண்வெளி பயணங்களை மேற்கொள்ள உதவும் கிரையோஜெனிக் இஞ்ஜினை இஸ்ரோ தொடர்ந்து சோதித்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள மகேந்திரகிரியில் உள்ள ப்ரோபல்ஷன் காம்ப்ளக்ஸில், கிரையோஜெனிக் இஞ்ஜினை சாதாரண சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் சோதித்து வெற்றிகண்டுள்ளது.
திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்ஸிஜன் போன்ற அதீத குளிரூட்டப்பட்ட திரவ எரிபொருட்கள் இந்த வகை இஞ்ஜினில் பயன்படுத்துகிறது
ஒரே ராக்கெட்டில் பல செயற்கைக்கோள்களை ஏவும் திட்டங்களின் போது, வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்த ஒவ்வொரு முறையும் இஞ்ஜினை Re-start செய்ய இந்த கிரையோஜெனிக் இஞ்ஜின் உதவும்
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள், கனமான செயற்கைக்கோள்களை ஏவுதல், விண்வெளியில் சுற்றுப்பாதையை சரிசெய்தல், உள்ளிட்டவைகளுக்கு இந்த கிரையோஜெனிக் இஞ்ஜினின் முக்கிய பங்காற்றுகிறது .
இந்த இஞ்ஜின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் இஸ்ரோவின் ‘Gaganyaan’ திட்டத்தில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.