தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர மற்ற யாருக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி.தினகரன் கூறியதாவது :
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர மற்ற யாருக்கும் பாதுகாப்பில்லை. இங்கு தினந்தோறும் 4 கொலைகள் நடந்தேறி வருகிறது. இந்தக் கொலைகளை செய்வது 20 வயதுக்குட்ப்பட்ட இளைஞர்களாக உள்ளார்கள்.
வேலையில்லா திண்டாட்டம், கஞ்சா, போதை கலாச்சாரத்தால், இளைஞர்கள் அடிமையாகி, கூலிப்படைகளாக மாறிவருவது வருத்தத்துக்குரியதாகும்.
Also Read : விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..!!
சீர்கெட்டு கிடக்கும் சட்டம் – ஒழுங்கை, தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். அண்மைக்காலமாக யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலையில், வெறும் 5 ஆயிரம், 10 ஆயிரத்துக்கு கொலை செய்கின்ற அவல நிலைமை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது .
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக ரூ. 1000, ரூ.2000 கொடுத்து ஏழை, எளிய மக்களை விலைக்கு வாங்குகிறார்கள் என தெரிவித்துள்ளார்.