ரேஷன் கடைகளில் இன்று முதல் அத்தியாவசிய பொருட்களை பெறலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவதால், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் அத்தியாவசிய பொருட்களை பெறலாம் என அறிவித்துள்ளது.
தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், கரும்பு, பச்சரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய் உள்ளிட்ட 21 பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன் படி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரேசன் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது பொங்கலுக்காக அரசு வழங்கும் பொங்கல் பை தொகுப்புகள் ரேசன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதில் பொருட்கள் சில தரமற்றவையாக உள்ளதாகவும், தொகுப்பு பைகள் குறைந்த அளவிலேயே அனுப்பப்பட்டுள்ளதாகவும் புகார்கள் உள்ளன. இதனை சரி செய்ய அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் இன்று முதல் அத்தியாவசிய பொருட்களை பெறலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவதால், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பொங்கல் சிறப்பு தொகுப்பு 65% பேருக்கு வழங்கப்பட்டதால் தற்போது இன்று முதல் அத்தியாவசிய பொருட்களை பெறலாம் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.