தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 41% குறைவாக பெய்ந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 41% குறைவாக பெய்துள்ளது.
அக்டோபர் 1 முதல் இன்று வரை இயல்பாக 136.5 மிமீ பதிவாக வேண்டிய சூழலில், 80.5 மிமீ மட்டுமே மழை பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளாவில் அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் கனமழைக்கும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.