அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு ரூ.10 கோடி பரிசு உ.பி. சாமியார் பரமஹன்ஸ ஆச்சார்யா வீடியோ வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி டெங்கு ,கொரனோ ,மலேரியா இதை எல்லாம் நாம் எதிர்க்க கூடாது அதனை ஒழித்து கட்ட வேண்டும்.
அப்படி தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்க்க கூடாது அதனை ஒழுத்து கட்டவேண்டும் என்று பேசியிருந்தார்.இதற்க்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பீகார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ. 10 கோடி என உத்தரபிரசேத மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா எனும் சாமியார் அறிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர் உதயநிதியின் புகைப்படத்தை கத்தியால் குத்தியும், தீயிட்டுக் கொளுத்தியும் தனது எதிர்ப்பை பகிர்ந்துள்ளார்.மேலும் இந்த சம்பவம் தமிழகம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.