மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் முக்கிய திருவிழாக்கள், கோவில் கும்பாபிஷேகங்கள் மற்றும் சிறப்பு தினங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த விடுமுறை நாட்களை அறிவிக்கும் மாவட்ட ஆட்சியர்கள் அந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் வேறு ஒரு நாளை வேலை நாளாக அறிவிப்பார்கள்.
அந்த வகையில் தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அன்றைய தினம் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படவுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் பிரசித்தி பெற்ற காவிரி துலாக்கட்டம் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் இந்த துலா கட்ட தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கூறி உள்ள மாவட்ட ஆட்சியர் மகா பாரதி, நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும் கடைமுக தீர்த்தவாரி உற்சவ தினத்தில் மாவட்டத்தில் அதிக அளவிலான பக்தர்கள் கூடுவது வழக்கம். இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 16ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய அரசு அலுவலகங்கள் மற்றும் கருவூல பணிகளுக்கான ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்படும். அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 25ஆம் தேதி வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு தெரிவித்துள்ளார்.