ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கிய நிலையில், பிப்ரவரி 7-ஆம் தேதியுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது. இதில் 96 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்ததில் 83 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு 13 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் நாம் தமிழர் சார்பில் நேற்று தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் (seeman) நாம் தமிழர் கட்சி சார்பில் விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மேனகாவுகவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஏன் தேர்தலில் தனித்து நிற்கிறீர்கள் என்று அனைவரும் தன்னிடம் கேட்பதாக கூறினார். ஆனால்,மக்கள் எங்களை கைவிட மாட்டார்கள் வாக்கு செலுத்தி வெற்றி பெற வைப்பார்கள் என்று நம்பிக்கையில் தான் தொடர்ந்து தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்தார்.
மேலும், வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய சீமான்,இந்த இடைதேர்தலில் மக்கள் பணத்திற்காக ஓட்டு செலுத்தினால் இனி மக்கள் போராட்டம் ,பிரச்சனைகளில் வேடிக்கை தான் பார்போம் என்று தெரிவித்த அவர்,ரொம்ப நாள கெஞ்சுகிறோம் விவசாயி சின்னத்துக்கு ஒரு முறை ஓட்டு போடுங்க என்று மக்களிடம் வாக்கு (seeman) சீமான் திரட்டினார்.