இந்தியாவில் விதிக்கப்பட்ட புது பாஸ்போர்ட் விதிகளை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தேர்தல் அடையாள அட்டை இருந்தால் மட்டும் போதும். விசா மற்றும் பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியா டூ நேபாளம் டூர் செல்லலாம்.
வழக்கமாக எந்த தடையும் இல்லாமல் உள்நாட்டுப் பயணத்தை மேற்கொள்ள முடியும். ஆனால், வெளிநாடுகளுக்குச் செல்வோர் சில விதிகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும். அதாவது, வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் அதற்கு பாஸ்போர்ட் தேவை.
வெவ்வேறு நாடுகளில் வெளிநாட்டு பயணம் செல்ல வெவ்வேறு விதிகள் உள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் அவசியமாகிறது. பாஸ்போர்ட் இல்லாததால், மக்கள் வேறு நாடுகளுக்கு செல்ல முடியாது. இருப்பினும், பாஸ்போர்ட் இல்லாமலேயே இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சில நாடுகளுக்குச் செல்ல முடியும் என்பது பலரும் அறியாத ஒன்று.
இந்தியாவில் இருந்து இரண்டு நாடுகளுக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் தேவையில்லை. அதாவது உங்கள் புகைப்பட அடையாள அட்டைகளில் ஒன்றைக் கொண்டு மட்டுமே பூடான் மற்றும் நேபாளம் நாடுகளுக்குச் செல்ல முடியும்.
பெரியவர்கள் பூட்டானுக்கு செல்ல வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை எடுத்துச் செல்லாம்.
இதுகுறித்த நேபாளத்தின் ஆலோசனையின்படி, இந்தியர்களுக்கு அவர்களின் இந்திய குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்கள் இருந்தால் போதும். அதாவது, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டையை காட்டலாம்.
பூட்டான் மற்றும் நேபாளம் தவிர, சில நாடுகளில் பாஸ்போர்ட் அவசியம் ஆனால் விசா தேவையில்லை.
உலகம் முழுவதும் மொத்தம் 58 பயண இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். அவை :
மாலத்தீவு, மொரிஷியஸ், தாய்லாந்து, மக்காவ், இலங்கை, பூட்டான், நேபாளம், கென்யா, மியான்மர், கத்தார், கம்போடியா, உகாண்டா, சீஷெல்ஸ், ஜிம்பாப்வே மற்றும் ஈரான் ஆகியவை ஆகும்.