தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. 489 பேரூராட்சிகளில் 74.68%, 138 நகராட்சிகளில் 68.22%, 21 மாநகராட்சிகளில் 52.22% என மொத்தம் 60.70%வாக்குகள் பதிவாகின.
இதில் அதிகபட்சமாக தருமபுரியில் 80.49%, குறைந்தபட்சமாக சென்னையில் 43.59% வாக்குகள் பதிவாகின.
வாக்கு எண்ணிக்கை முடிந்து வாக்குச்சாவடிகளில் இருந்து பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வார்டு வாரியாக பாதுகாக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கைக்காக இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் சுமார் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது, வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.